’எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்…’ தெறிக்க விடும் பரோட்டா சூரி!

காமெடி நடிகர் பரோட்டா சூரி 10 ஆண்டு சேலஞ்ச் போட்டோவை ட்விட்டரில் போட்டு அசத்தி வருகிறார். 10 ஆண்டுகளுக்கு முன் வெண்ணிலா கபடி குழு படத்தில் நடித்த போது கிராமத்து சாயலில் இருந்த சூரி, சிக்பேக் உடல்வாகில் தற்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் இணைத்து பதிவிட்டுள்ளார்.

பொதுவாக திரைப்படங்களில் பொதுவாக பயன்படுத்தப்படும் ஆங்கில வார்த்தைகளை உச்சரிக்கத் தெரியாத அவர் ஆங்கிலத்தில் ‘’ 10 ஆண்டு சேலஞ்ச். வெண்ணிலா கபடி குழு படத்தில் வாய்ப்பளித்த இயக்குநர் சசீந்திரனுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் நன்றி’ என தெரிவித்துள்ளார்.

இந்தப் பதிவிற்கு பாராட்டுகளும், கலாய்ப்புகளுமாக கமெண்டுகள் குவிக்கின்றன. ’’இங்கல்லாம் நல்லா இங்கிலீஸ் பேசுறீங்க. படத்துல ஏன் தப்பு தப்பா பேசுறீங்க. ப்பா.. பிரதர் செம்ம்ம்ம்ம்ம்ம. காமெடி வராட்டியும் பாடி ஃபிட்னஸ்ல மாஸ் காட்றிங்க. எப்படி இருந்த நீங்க இப்படி ஆக்கிட்டீங்க, துரை இங்கிலிஷ் எல்லாம் பேசுது. அண்ணே இது வேற யாரோ தானே டைப் பண்ணி கொடுத்தாங்க. ஜான் ஆப்ரஹாம் மாதிரி ஆயிட்டீங்க. காலம் ஒரு நாள் எல்லோருக்கும் பிடித்தது போல் அமையும் என்பதற்கு தாங்கள் ஓர் எடுத்துக்காட்டாக உள்ளீர்கள். ஐயாக்கு தமிழ் வராதோ? அது எப்படிடா ரெண்டு படம் ஹிட் ஆனதும் தமிழ் மறந்து போது…’’ என்று பல்வேறு கோணங்களில் சூரிக்கு பாராட்டுகளும் விமர்சனங்களும் பதிவிடப்பட்டு வருகின்றன.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.