தான் செய்யும் உதவிகளை வெளிக்காட்டி கொள்ளாத அஜித்..!! என்ன செய்தார் தெரியுமா..?


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் என்றாலே பெரும்பாலும் பிரபலங்கள், ரசிகர்கள் என்று அனைவருக்கும் மிகவும் பிடிக்கும்.

இவருக்கு மாபெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது, அஜித்தின் படங்கள், பிறந்த நாள் என இவரை சம்மந்தபட்ட எந்தவொரு சிறிய விஷயம் என்றாலும் அதை ரசிகர்கள் பெரிதாகவே கொண்டாடுவார்கள்.

இவர் படங்கள் வெளியாவதென்றால் திரையரங்குகள் அனைத்தும் திருவிழா போல் காட்சியளிக்கும். இவருடைய ஸ்டைல், பைக் ஓட்டும் விதம் போன்ற செயல்கள் பலரையும் எளிதில் கவரும் வகையில் இருக்கும்.

சினிமாவில் ஒருசிலர் சிறிய உதவியை செய்துவிட்டு, அதை வெளிச்சம் போட்டு காட்டி விளம்பரம் தேடிகொள்வோர் மத்தியில் தல அஜித் எண்ணற்ற பல உதவிகளை யாருக்கும் தெரியாமல் செய்து வருகிறார்..

எப்படி என்றால் உதவி பெற்றவர்களுக்கே, யார் இந்த உதவியை செய்தார்கள் என்று தெரியாத வண்ணம் செய்து வருகிறார்..


அந்த வகையில் ஆஸ்திரேலிய தமிழர் ஒருவர் சமீபத்தில் ஒரு தகவலை பகிர்ந்துள்ளார்

அஜித் நடித்த ஜனா படத்தின் ஷூட்டிங் நடந்தபோது, அப்போது தமிழகத்தில் இலங்கை அகதியாக இருந்ததாகவும், அஜித்தை பார்க்க சான்ஸ் கிடைத்த போது உங்களுக்கு என்ன உதவி வேண்டும் என்று தல கேட்டதாகவும், இலங்கை தமிழர் முகாமில் கழிப்பறை வசதி இல்லை என்று கூறவே,

இதனை கேட்ட அஜித் அடுத்த நாளே தனது சொந்த செலவில் முகாமில் கழிப்பறை கட்டி தந்துள்ளார்

இந்த விஷயம் அந்த முகாமில் உள்ள பலருக்கு தெரியாதாம், முக்கிய நபர்களுக்கு மட்டுமே தெரியுமாம்

கழிப்பறை இன்று காடுகளுக்கு சென்ற எங்களுக்கு இது பெரிய உதவி என்று அந்த நபர் தற்போது கூறியுள்ளார்

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி