மீண்டும் மோதிக்கொள்ளும் தளபதி விஜய் மற்றும் கார்த்தி, எப்போது தெரியுமா? வெளியான புதிய தகவல்..

தளபதி விஜய் மாஸ்டர் திரைப்படம் இந்த வருடம் ஏப்ரல் மாதமே வெளியாக இருந்தது, ஆனால் கொரோனா காரணமாக இப்படத்தின் வெளியீடு தள்ளிப்போனது.

மேலும் தற்போது திரையரங்குகள் அனைத்தும் சில கட்டுபாடுகளுடன் நாடுமுழுவதிலும் திறக்கவுள்ளதால், மாஸ்டர் திரைப்படமும் பொங்கல் விடுமுறையில் வெளியாகும் என நம்பப்படுகிறது.

இந்நிலையில் நடிகர் கார்த்தி நடிப்பில் சுல்தான் திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடித்துள்ளது. இதனை கார்த்தி தனது ட்விட்டர் பக்கத்திலே அறிவித்து இருந்தார்.

அதுமட்டுமின்றி இப்படமும் 2021 பொங்கல் விடுமுறையில் வெளியாகும் என கூறப்படுகிறது, இதனையடுத்து தளபதி விஜய்யின் மாஸ்டர் திரைப்படமும் பொங்கலில் வெளியாவதால்.

வசூலில் இந்த திரைப்படங்களும் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, இதற்கு முன் கடந்த வருடம் தீபாவளியில் பிகில் மற்றும் கைதி திரைப்படங்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!