தளபதி 63 படத்தின் ரகசியத்தை போட்டுடைத்த பிரபலம் – கோபப்பட்ட அட்லீ.!

இயக்குனர் அட்லீ தற்போது விஜய்யின் தளபதி63 படத்தை இயக்க துவங்கியுள்ளார். சில நாட்களுக்கு முன்பு துவங்கிய ஷூட்டிங்கில் முதலில் சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இதே படத்தில் பிரபல காமெடி நடிகர் ரோபோ ஷங்கரின் மகள் இந்ரஜா நடிக்கிறார். அந்த தகவலை வெளியில் கசியவிட்டதே ரோபோ ஷங்கர். அதனால் அவர் மீது அட்லீ கோபப்பட்டாராம்.

மகள் நடிப்பது ஒருபுறம் இருந்தாலும் தனக்கும் விஜய் படத்தில் சான்ஸ் வேண்டும் என கேட்டாராம் ரோபோ, அதற்கு அட்லீ “விரைவில் நாம் இணைந்து படம் பண்ணலாம். இதையாவது ரகசியமாக வைத்திருங்கள்” என கூறினாராம்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.