தன்னை விட 5 வயது பெரிய ஹீரோயினுடன் ஜோடி சேரும் தனுஷ்!!

`வடசென்னை’ படத்தை தொடர்ந்து தனுஷ் – வெற்றிமாறன் `அசுரன்’ படத்தில் இணைந்திருக்கின்றனர். கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு குடியரசு தினத்தன்று துவங்கவிருக்கிறது.

இந்த நிலையில், இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக நடிக்க பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர் ஒப்பந்தமாகியிருக்கிறார். இதுவே மஞ்சு வாரியர் நடிக்கும் முதல் தமிழ் படமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் நடிக்கும் மற்ற கதாபாத்திரங்கள் குறித்த தகவல் விரைவில் வெளியாக இருக்கிறது.

நீண்ட இடைவேளைக்குப் பிறகு தனுஷ் – வெற்றிமாறன் இணையும் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.