சர்காரின் மொத்த வசூலை 8 நாளில் முறியடித்ததா விஸ்வாசம்?

தளபதி விஜய் நடிப்பில் அதிகளவில் வசூல் கொடுத்த படங்கள் மெர்சல் மற்றும் சர்கார். இந்த இரண்டு படங்களுமே தமிழகத்தில் ரூ 120 கோடி வரை வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.

ஆனால், நேற்று விஸ்வாசம் படத்தை வெளியிட்ட விநியோகஸ்தர்களே விஸ்வாசம் தமிழகத்தில் ரூ 125 கோடி வரை வசூல் செய்துவிட்டதாக கூறியுள்ளனர்.

இதுக்குறித்து நம் தளத்திலேயே கூறியிருந்தோம், இந்நிலையில் இதுக்குறித்து விசாரிக்கையில் இந்த தகவலை எந்த திரையரங்க உரிமையாளர்களும் மறுக்கவில்லை.

ஆனால், அதே நேரத்தில் கண்டிப்பாக தமிழகத்தில் விஸ்வாசம் ரூ 90 கோடிகளுக்கு மேல் தற்போது வரை வசூல் செய்திருக்கும் என்பதில் மாற்று கருத்தே இல்லை.

இந்த படம் மொத்த ஓட்டத்தில் ரூ 130 கோடி வரை வசூல் செய்யும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

எது எப்படியோ விநியோகஸ்தரே சொல்லிவிட்டார், அவர்கள் கணக்கு படி பார்த்தால் சர்கார் மொத்த வசூலை விஸ்வாசம் 8 நாட்களில் முறியடித்துவிட்டது தான்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.