அஜித்தின் இந்த படத்தை பார்த்து தான் நான் வெறித்தனமான ரசிகராக மாறினேன்! டி.இமான்

அஜித்தின் நடிப்பில் கடந்த வாரம் வெளியான விஸ்வாசம் படத்திற்கு இசையமைத்திருந்த டி.இமான் அஜித்தை பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியுள்ளார்.

அதில், அஜித் சாரின் ஆசை படத்தை பார்த்த பின்பு தான் நான் அவரது வெறித்தனமான ரசிகராக மாறினேன். 10 வருடங்களுக்கு முன் எனக்கு கல்யாணம் ஆன புதியதில் என் மனைவியுடன் ஐஸ்க்ரீம் பார்லருக்கு சென்றிருந்தேன்.

அப்போது அங்கு அஜித் சார் அவரது மனைவியுடன் வந்திருந்தார். திடீரென எழுந்து என் முன்பு வந்து நின்று, கை கொடுத்து, சாரி உங்களுக்கு கல்யாணம் நடந்ததாக கேள்விப்பட்டேன், கல்யாணத்திற்கு வர முடியாமல் போனது. நீங்க எப்படி இருக்கீங்க, உங்க மிஸ்ஸஸ் எப்படி இருக்காங்க என கேட்டார். இதை எல்லாத்தையும் விட முக்கியமாக, வந்து பேசுவதற்கு முன், hello i am அஜித்குமார் என சொன்னார். அது தான் அவர்.

அஜித் சாருக்கு ஹேட்டர்ஸும் இருக்காங்க. ஆனால் அவரை பற்றி பர்ஸனலாக தெரிந்துகிட்டோம் என்றால் அவருடய ஹேட்டர்ஸ் கூட ரசிகராக மாறிவிடுவர் என்றார்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.