சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தின் டீசர் ரிலீஸ் தேதி.. மாஸ் அப்டேட்

பாண்டிராஜ் இயக்கத்தில் கிராமத்து கதைக்களத்தில் உருவாகியுள்ள திரைப்படம் எதற்கும் துணிந்தவன்.

சூர்யா கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் முதல் முறையாக நடித்துள்ளார்.

மேலும் இப்படத்தில் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சூரி, விஜய் டிவி புகழ் மற்றும் ராமர் என பலரும் நடித்துள்ளனர்.

இப்படம் அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் 4ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தின் டீசர் குறித்து சூப்பர் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதன்படி, இப்படத்தின் டீசர் 2022 ஜனவரி மாதம் 4ஆம் தேதி வெளியாக பெரிதும் வாய்ப்புகள் இருக்கிறது என்று மாஸ் தகவல் வெளியாகியுள்ளது.

விரைவில் சன் பிச்சர்ஸ் நிறுவனத்திடம் இருந்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!