வெளியான 15 மணி நேரத்தில் ரௌடி பேபி பாடல் படைத்த சாதனை

மாரி 2 படத்தில் இடம்பெற்றுள்ள ரவுடி பேபி பாடல் வீடியோவை படக்குழுவினர் நேற்று வெளியிட்டனர். கடந்த 2015 -ம் ஆண்டு வெளியான ‘மாரி’ படத்தின் இரண்டாம் பாகமாக கடந்த மாதம் திரைக்கு வந்த படம் ‘மாரி 2’. தனுஷ் நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார்.

மேலும் வரலட்சுமி சரத்குமார், டொவினோ தாமஸ், ரோபோ சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். பாலாஜி மோகன் இயக்கிய இந்தப் படத்துக்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.

கடந்த மாதம் வெளியான இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. 10 ஆண்டுகளுக்கு பிறகு தனுஷ் – யுவன் ஷங்கர் ராஜா கூட்டணி இந்தப் படத்தின் மூலம் இணைந்து ரசிகர்களுக்கு இசை விருந்து அளித்திருந்தனர்.

தனுஷ் எழுதி பாடியிருந்த ரவுடி பேபி பாடலுக்கு இயக்குநரும் நடிகருமான பிரபு தேவா நடனம் அமைத்திருந்தார். படத்தின் முதல் பாடலாக வெளியான இந்தப் பாடலின் லிரிக்கல் வீடியோ 48 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. இந்த நிலையில் படத்தின் பாடல் வீடியோவை யூடியூப் பக்கத்தில் படக்குழு வெளியிட்டுள்ளது. வீடியோ பாடல் வெளியாகி 15 மணி நேரமே ஆகும் நிலையில் இதுவரை இந்த பாடலை 3.5M பார்வையாளர்களும் 206K லைக்குகளும் பெற்று சாதனை படைத்துள்ளது.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.