எல்சியூ-வுக்கு கீழ் ‘லியோ’ வருமா? சூப்பர் அப்டேட் கொடுத்த லோகேஷ் கனகராஜ்

மாநகரம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். அதன்பின்னர் கைதி, மாஸ்டர், விக்ரம் படங்களை இயக்கி தனக்கான இடத்தை பிடித்து கொண்டார். இவர் தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ படத்தை இயக்கி வருகிறார். இந்திய திரையுலகின் முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்து வரும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. இப்படத்தின் முதல் பாடலான “அல்டர் ஈகோ நா ரெடி” விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் அளித்த பேட்டியில் பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில், நிறைய படங்கள் இயக்க வேண்டும். நீண்ட நாட்கள் இந்த இடத்தில் இருக்க வேண்டும் என்ற எந்தத் திட்டமும் இல்லை. நான் தற்போது இந்த யூனிவர்ஸ் முயற்சித்ததற்கு நடிகர்கள், தயாரிப்பாளரகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். காரணம், அது அவ்வளவு எளிதாக நடந்துவிடாது. என்ஓசி வாங்க வேண்டும் என நிறைய குழப்பங்கள் உண்டு.

இந்த யூனிவர்ஸுக்கு கிடைக்கும் வரவேற்புக்கு நியாயம் சேர்க்க வேண்டும் என நினைக்கிறேன். எல்சியு-வில் 10 படங்கள் இயக்கிவிட்டு அதிலிருந்து வெளியேறிவிடுவேன். லியோ படத்தில் விஜய்யுடன் பணியாற்றியது மகிழ்ச்சியாக இருக்கிறது. இன்னும் 10 நாட்களில் விஜய் உடனான படப்பிடிப்பு நிறைவடைய உள்ளது. மற்ற நடிகர்களுடன் படப்பிடிப்பு இருக்கிறது. விஜய்யை மிஸ் செய்வது கஷ்டமாகத்தான் இருக்கிறது. எல்சியூ-வுக்கு கீழ் ‘லியோ’ வருமா என்பதை அறிய காத்திருங்கள்” என்றார்.


  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!