பிரபல நடிகருடன் கவர்ச்சி உடையில் நடிகை காஜல் அகர்வால் வைரல் புகைப்படம்

தற்போது நடிகை காஜல் அகர்வால் ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பாரிஸ் பாரிஸ்’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் கதையின் நாயகியாக காஜல் நடித்துள்ளார். இந்தப் படம் இந்தியில் வெளியாகி வெற்றி பெற்ற ‘குயின்’ படத்தின் ரீமேக்காகும். இந்தியில் இந்தப் படத்தில் கங்கணா ரணாவத் நடித்திருந்தார். தற்போது இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளில் உருவாகி வருகிறது. தமிழ் ரீமேக்கில்தான் நடிகை காஜல் அகர்வால் நடித்து வருகிறார்.

அடுத்ததாக ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் ‘இந்தியன் 2’ படத்தில் கமலுக்கு ஜோடியாக நடிக்கிறார் காஜல் அகர்வால். இந்த படத்தில் நடிகை காஜல் அகர்வால் ஆக்சன் கலந்த ரோலில் அவர் நடிப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், நடிகை காஜல் அகர்வால், தெலுங்கில் பெல்லம்கொண்ட சாய் ஸ்ரீனிவாஸ் நடிக்கும் படத்தில் ஒப்பந்தமாகியிருக்கிறார். இந்தப் படத்தை தேஜா இயக்கவுள்ளார். இந்தப் படத்தில் நடிகை காஜல் அகர்வால் நெகடீவ் கலந்த வேடத்தில் நடிக்கிறார். அதாவது பணத்திற்காக எதையும் செய்யும் பெண்ணாக அவர் இந்த படத்தில் நடிக்கிறாராம் காஜல். முதன் முறையாக தெலுங்கு சினிமாவில் வில்லியாக களமிறங்குகிறார் நடிகை காஜல் அகர்வால்.

இந்நிலையில், இன்று பிறந்தநாள் கொண்டாடும் பெல்லம்கொண்ட ஸ்ரீனிவாஸ்-ற்கு தன்னுடைய பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார் காஜல். மேலும், அவருடன் இருக்கும் புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில், படு கவர்ச்சியான உடையணிந்துள்ளர். இந்த புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.