7 வருடங்களுக்கு பிறகு யோகி பாபு படத்தில் ரீ-என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை

விமல், வரலட்சுமி இணைந்து நடித்துள்ள `கன்னிராசி’ படத்தை இயக்கிய முத்துகுமரன் அடுத்ததாக இயக்கிவரும் படம் `தர்மபிரபு’. யோகி பாபு, `வத்திக்குச்சி’ திலீபன் ரமேஷ் திலக் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்த நிலையில், இந்த படத்தின் மூலும் நடிகை மேக்னா நாயுடு தமிழில் ரீ-என்ட்ரி கொடுக்க இருக்கிறார். இவர் சிம்பு நடிப்பில் வெளியான சரவணா படத்தில் இரண்டாவது நாயகியாக நடித்தவர். தொடர்ந்து, ஜாம்பவான், வீராசாமி, வைத்தீஸ்வரன், பந்தையம் உள்ளிட்ட படங்களில் சிறு வேடங்களில் நடித்திருந்தார். சிறுத்தை, குட்டி படங்களில் குத்து பாட்டுக்கு நடனமாடி இருக்கிறார். அதன்பின்னர் தமிழ் படங்களில் தோன்றாத இவர் `தர்மபிரபு’ படத்தில் நடிக்க இருக்கிறார்.

இதுகுறித்து மேக்னாவிடம் கேட்ட போது, அவரும் அதனை உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் தான் இந்த படத்தில் நான் நடித்துள்ள கதாபாத்திரம் ரசிகர்களுக்கு வித்தியாசமானதாக இருக்கும். ஒரு பாடலுக்கும் நடனமாடுகிறேன் என்றார்.

இதில் யோகி பாபு எமனாகவும், ரமேஷ் திலக் சித்ரகுப்தன் கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர். ஸ்ரீவாரி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். மகேஷ் முத்துச்சாமி ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.