வில்லன் வேடம் வேண்டாம்..!! அடம் பிடிக்கும் முன்னணி நடிகர்..!!


மலையாள பட உலகில் முன்னணி ஹீரோவாக இருக்கும் பகத் பாசில் சிவகார்த்திகேயன் நடிக்கும் வேலைக்காரன் படம் மூலம் தமிழுக்கு வருகிறார்.

வேலைக்காரன் படத்தில் வில்லனாக நடித்திருக்கும் பகத்துக்கு தொடர்ந்து வில்லன் வேடங்களில் நடிக்க வாய்ப்புகள் வருகின்றனவாம்.ஆனால் அவருக்கு வில்லன் வேடத்தில் நடிக்க விருப்பம் இல்லையாம். வில்லன் கதைகளோடு வருகிறவர்களை திருப்பி அனுப்பிவிடுகிறாராம்.

தமிழில் ஹீரோவாக நடிக்க ஆசைப்படுகிறார். எனவே ஹீரோவுக்கான கதைகளாகக் கேட்டு வருகிறார்.அவர் மனைவி நஸ்ரியாவும் நடிக்க வந்துவிட்டார். எனவே இருவருக்கும் பொருந்தும் கதை வைத்திருப்பவர்கள் பகத்தை அணுகலாம்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி#