ஜோதிகா பேசிய கெட்ட வார்த்தை..!!! வேறு எந்தெந்த படங்களிலும் வந்துள்ளது தெரியுமா..?


ஹீரோ கெட்ட வார்த்தை பேசலாம் ஆனால் ஹீரோயின் பேசினால் அது உலக மகா குத்தமா?

நாச்சியார் பட டீஸரில் ஜோதிகா தே.ப. என்கிற கெட்ட வார்த்தையை பேசியுள்ளார். ஜோதிகா எப்படி அந்த வார்த்தையை பேசலாம் என்று ஆளாளுக்கு வரிந்து கட்டிக் கொண்டு வருகிறார்கள்.

ஏன் ஹீரோ கெட்ட வார்த்தை பேசும்போது ஹீரோயின் பேசக் கூடாதா?


கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள துருவ நட்டச்சிரம் டீஸரில் சீயான் ஜோதிகா பேசிய வார்த்தையை மெட்ராஸ் பாஷையில் கூறினார். அதை யாருமே கண்டுக்கவே இல்லையே.

மணிரத்னம் இயக்கத்தில் வெளியான நாயகன் படத்தில் உலக நாயகன் கமல் ஹாஸனும் கூடத் தான் ஜோதிகா சொன்ன அதே கெட்ட வார்த்தையை பேசினார். அதுக்கு எல்லாம் யாரும் குதிக்கலையே.

மங்காத்தா படத்தில் தல அஜீத் ராய் லட்சுமியை பார்த்து தே. மு. என்ற வார்த்தையை சொன்னார். அவர் பேசிய போது ரசிகர்கள் கை தட்டினார்களே தவிர யாரும் கண்டனம் தெரிவிக்கவில்லை.


கவுதம் மேனன் இயக்கத்தில் அஜீத் சத்யதேவ் ஐபிஎஸ்ஸாக நடித்த என்னை அறிந்தால் படத்தில் தல அருண் விஜய்யுடன் சண்டை போடும்போது லெக்சரா கொடுக்கிற என்று கூறி ஒரு கெட்ட வார்த்தை பேசினார்

கவுதம் மேனன் இயக்கத்தில் கமல் போலீஸ் அதிகாரியாக நடித்த வேட்டையாடு விளையாடு படத்தில் கமல் வில்லன்கள் இடத்திற்கு சென்று கண்ணை தோண்டுடா என்று சொல்லும்போது கெட்ட வார்த்தை பேசினார

செல்வராகவன் இயக்கத்தில் வெளியான ஆயிரத்தில் ஒருவன் படத்தில் இன்ட்ரோ காட்சியிலேயே கார்த்தி கெட்ட வார்த்தை பேசியிருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.


சினிமா படங்களில் இதுவரைக்கும் யாருமே பேசாத கெட்ட வார்த்தையை ஜோதிகா மட்டும் பேசிவிட்டது போன்று போர்க்கொடி தூக்குகிறார்கள். ஜோதிகாவை அவரது குழந்தைகளின் பெயரை வைத்து மீம்ஸ் போட்டு அசிங்கப்படுத்துகிறார்கள். ஆணுக்கு ஒரு நியாயம், பொண்ணுக்கு ஒரு நியாயமா?

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி#