பாலாவின் ‘வர்மா’வைக் கைப்பற்றிய முன்னணி நிறுவனம்!

கடந்தாண்டு தெலுங்கில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் ‘அர்ஜுன் ரெட்டி’. நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான இந்தப் படத்தை இயக்குநர் சந்தீப் ரெட்டி இயக்கியிருந்தார். இதில் ஷாலினி பாண்டே ஹீரோயினாக நடித்திருந்தார். தற்போது இந்தப் படம் தமிழில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது ‘வர்மா’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை இயக்குநர் பாலா இயக்கியிருக்கிறார்.

நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தில் மேகா என்ற கொல்கத்தாவைச் சேர்ந்த மாடல் அழகி இதில் ஹீரோயினாக நடிக்கிறார். இதனை ‘E4 எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் தயாரிக்கிறது.

ரதன் இசையமைக்கும் வர்மா படத்திற்கு சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார், ராஜு முருகன் வசனம் எழுதியுள்ளார்.

இந்நிலையில் பிப்ரவரியில் வெளியாகும் இந்தப் படத்தை ‘E4 எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனத்துடன் இணைந்து சக்தி ஃபிலிம் ஃபேக்டரி வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிப்ரவரி மாதத்தில் வெளியாகவுள்ள மற்றொரு திரைப்படம் ‘சர்வம் தாள மயம்’ என்ற படத்தையும் சக்தி ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் வெளியிடுவது குறிப்பிடத்தக்கது.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.