பிரபல நாடக கலைஞரும், நடிகருமான சீனு மோகன் காலமானார்

பிரபல நாடக கலைஞரும், நடிகருமான சீனு மோகன் (61) மாரடைப்பால் சென்னையில் காலமானார். சிறுநீரகக் கோளாறாறால் சிகிச்சை பெற்று வந்த சீனு மோகன் இன்று காலை மாரடைப்பால் திடீரென காலமானார்.

கிரேஸி மோகனின் நாடகங்களில் சீனு என்ற கதாபாத்திரத்தில் நடித்து சீனு மோகன் என்று அழைக்கப்பட்ட இவர் சுமார் 3000-க்கும் மேற்பட்ட மேடை நாடங்களில் நடித்துவிட்டார். 1989-ல் வருஷம் பதினாறு என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து மணிரத்னம் இயக்கய அஞ்சலி, தளபதி படங்களில் நடித்தார்.

மேலும், தலைவாசல், இறைவி, ஆண்டவன் கட்டளை, ஸ்கெட்ச், கோலமாவு கோகிலா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கடைசியாக இவரது நடிப்பில் செக்கச்சிவந்த வானம் ரிலீசானது.

இதுதவிர மர்மதேசம், மது +2, மதில் மேல் மது உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சீனு மோகன் மறைவுக்கு சினிமா பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், அவரது இறுதிச்சடங்கு 29.12.2018 (சனிக்கிழமை) அண்ணாநகரில் நடைபெறவிருவிருப்பதாக கிரேஸி மோகன் தெரிவித்துள்ளார்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.