என் பெயரை சொல்லி ஏமாற்றுகிறார்கள் – ஓவியா வருத்தம்

சின்ன வயசிலிருந்தே ரொம்ப சுதந்திரமா இருக்கணும்னு நினைக்கிற பொண்ணு நான். யாருகிட்டயும் எந்த உதவியும் கேட்கமாட்டேன். என் செலவைக்கூட நானே பார்த்துக்குவேன். அந்த வயசுல பணம் சம்பாதிக்க என்ன பண்ணலாம்னு யோசிச்சப்பதான் மாடலிங் வாய்ப்பு வந்துச்சு. மாடலிங், சின்னச் சின்ன விளம்பரங்கள் பண்ண ஆரம்பிச்சேன். என் பாக்கெட் மணிக்கு அது சரியா இருந்துச்சு. அப்போதான் என் மாடலிங் போட்டோஸ் பார்த்துட்டு ‘களவாணி’ படத்தின் டைரக்டர் சற்குணம் கூப்பிட்டார். ‘களவாணி’ படத்திலிருந்து ஹெலன் ஓவியாவா மாறியாச்சு.

புத்தாண்டு திட்டம் என்ன?

எப்போதும் போல நண்பர்களுடன் கொண்டாட திட்டமிட்டுள்ளேன். அதன் பின்னர் எனக்கு மிகவும் பிடித்த பயணம் மேற்கொள்ள இருக்கிறேன். அனேகமாக இமயமலைக்கு செல்லலாம்.

உங்கள் வாழ்க்கையை பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின், முன் என இரண்டாக பிரிக்கலாமா?

நிறைய பேர் நான் ஒரே இரவில் பெரிய ஆளாக, பிரபலமாக மாறிவிட்டதாக நினைக்கிறார்கள். அது ஓரளவு உண்மை தான். அந்த நிகழ்ச்சி மூலம் தான் எனக்கு இவ்வளவு புகழ் கிடைத்தது. ஆனால் பெரிய கஷ்டங்கள், சிரமங்களுக்கு பிறகே இந்த இடத்திற்கு வந்துள்ளேன். பல ஆண்டுகளுக்கு முன்பே சினிமாவுக்கு வந்துவிட்டேன். ஆனால் இந்த புகழ் கிடைக்கவில்லை. பதிலாக போராடிக்கொண்டே இருந்தேன். பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து ஒரு ஆண்டுக்கு மேல் ஆகியும் கூட மக்கள் என்னை மறக்காமல்நேசிக்கிறார்கள். அது ஆச்சர்யப்படுத்துகிறது.

இணையதளமோ, நேரிலோ என்னை ரசிகர்கள் அவர்கள் குடும்பங்களில் ஒருவராக தான் பார்க்கிறார்கள். இது என் வாழ்க்கையின் மிக முக்கிய தருணம். சிலர் என்னுடைய ரசிகர்களை தவறாக பயன்படுத்தி முறைகேடுகளில் ஈடுபடுத்தி சம்பாதிக்கிறார்கள். நான் சின்ன சின்ன வேடங்களில் நடித்த படங்களுக்கு கூட என் பெயரை சொல்லி விளம்பரம் தேடுகிறார்கள். வியாபார பொருட்களிலும் என் பெயரை பயன்படுத்துகிறார்கள். இது வருத்தம் அளிக்கிறது.

கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்க ஆர்வமா?

ஆமாம். ஆனால் அறம் போன்ற சீரியசான படங்கள் அல்ல. என்னுடைய படங்கள் வித்தியாசமானதாக இருக்கும். மாஸ் மற்றும் பொழுதுபோக்கு படங்களாக இருக்கும். என் ரசிகர்களும் என்னை போலவே இருக்க வேண்டும். கருத்து சொல்லி போரடிக்க விரும்பவில்லை.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.