முரட்டு கவர்ச்சி போஸ் கொடுத்த முரட்டு குத்து நடிகை – வைரல் புகைப்படம்..!!


இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் பேயாக நடித்தவர் சந்திரிகா ரவி. இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு, இவர் தனது ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் மாடலிங் செய்துக் கொண்டிருந்த போது பதிவு செய்திருந்த கவர்ச்சி படங்கள் இப்போது சமூக தளங்களில் வைரலாக பரவத் துவங்கியுள்ளது.

சந்திரிகா ரவி எனும் இவர் ஆஸ்திரேலியாவில் பிறந்து வளர்ந்த இந்தியாவை பூர்வீகமாக கொண்ட குடும்பத்தை சேர்ந்தவர் ஆவார். இவரது பிறந்த நாள் ஏப்ரல் ஐந்து. இவர் ஆஸ்திரேலியாவில் மெல்பேர்ன் பகுதியில் வசித்து வருகிறார். சிறு வயதில் இருந்தே இவருக்கு கலைகளில் ஆர்வம் அதிகம் என அறியப்படுகிறது.


சந்திரகா ரவியில் முதல் தமிழ் படம் செய். இதை தொடர்ந்து இவர் ஹரஹர மகாதேவகி படத்தின் இயக்குனர் சந்தோஷ் ஜெயக்குமாரின் இயக்கத்தில் வெளியான இருட்டு அறையில் முரட்டுக் குத்து எனும் படத்தில் பேய் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார்.

சந்திரகா ரவி மிஸ் மேக்ஸிம் இந்தியா ரன்னர் அப் பட்டம் வென்று இருக்கிறார். மேலும், மிஸ் வேர்ல்ட் ஆஸ்திரேலியா மற்றும் மிஸ் இந்தியா ஆஸ்திரேலியா போன்ற அழகிப் போட்டிகளில் இறுதி சுற்று வரை முன்னேறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.ஆரம்பத்தில் இருந்தே இவருக்கு மாடலிங்கில் பெரும் ஆர்வம் இருந்துள்ளது. இவர் நிறைய விளம்பரங்கள் மற்றும் சர்வதேச நாளேடுகளின் அட்டைப்படங்களில் இடம் பெற்றுள்ளார்.


சந்திரிகாவிற்கு மாடலிங்கை விட மிகவும் பிடித்தது கலை தான். ஆம்! இவர் இந்திய பாரம்பரிய நடனங்களான பரதநாட்டியம், கதக் போன்றவற்றை முறையாக கற்றுள்ளார். மேலும், தி டெம்பிள் ஆப் ஆர்ட்ஸ் எனும் பயிற்சி மையத்தில் நாடக நடிப்பு கற்றுள்ளதாக அறியப்படுகிறது.

மேலும், சந்திரிகா ஜாஸ், பாலட், கம்டம்போரரி போன்றவற்றை தி ஆஸ்திரேலியன் நேஷனல் யூத் பர்பார்மிங் ஆர்ட்ஸ் குழுவில் கற்றிருக்கிறார். இவர் தி நியூயார்க் பிலிம் அகடாமியில் நடிப்பு பயிற்சியும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், அம்மணி எடுத்துக்கொண்டு படு கவர்ச்சியான புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி இளசுகளின் சூட்டை கிளப்பி வருகின்றது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!