முதலில் வித்யாபாலன் அப்புறம் நயன்தாரா இப்போது சோனியா அகர்வால்..!! குழப்பத்தில் ரசிகர்கள்..!!


2012ம் ஆண்டு ஹிந்தியில் வெளிவந்த படம் கஹானி. காணாமல் போன கணவனைத் தேடி அலையும் ஒரு கர்ப்பினியின் கதை. இதில் வித்யாபாலன் நடித்திருந்தார். இந்தப்படத்தை சேகர் காமுலா தெலுங்கில் அனாமிகா என்ற பெயரிலும், தமிழில் நீ எங்கே என்ற பெயரிலும் ரீமேக் செய்தார். வித்யாபாலன் நடித்த கேரக்டரில் நயன்தாரா நடித்தார்.

இப்போது அதே மாதிரியான ஒரு படம் தயாராகியுள்ளது. படத்தின் தலைப்பு தனிமை. இலங்கையில் இறுதிப் போர் நடந்தபோது இந்தியாவுக்கு தப்பி வந்த தன் கணவனைத் தேடி இலங்கையை சேர்ந்த கர்ப்பிணி பெண் தமிழ்நாட்டுக்கு வருவது போன்ற கதை.


கணவனை தேடும் முயற்சியில் அவளுக்கு நேரும் அனுபவங்களே திரைக்கதை. ராமேஸ்வரம், சிங்கப்பூர், மலேசியாவில் படமாகியுள்ளது.

இதில் கர்ப்பிணியாக நடித்திருப்பது சோனியா அகர்வால். படத்தில் ஹீரோ இல்லை. கஞ்சா கருப்பு, மோகன்ராம், நடன இயக்குனர் சாண்டி முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள். தினா இசை அமைத்துள்ளார். காகித கப்பல் படத்தை இயக்கிய எஸ்.சிவராமன் இயக்கி உள்ளார். எஸ்.சுந்தரவள்ளி தயாரித்துள்ளார். ஜனவரி மாதம் வெளிவருகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!