நயன்தாராவுடன் இருக்கும் இந்த லட்டுக்குட்டி பாப்பா யார் தெரியுமா..? வைரல் புகைப்படம்..!!


ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நார்வே நாட்டில் நடைபெற்று வருகிறது. படத்தின் நாயகியான நயன்தாரா இப்படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளார்.

இந்த படப்பிடிப்பில் சிவகார்த்திகேயனுடன் நயன்தாரா எடுத்துக்கொண்ட போட்டோ சமீபத்தில் சமூக வலைதளங்களில் பரபரப்பாக பகிரப்பட்டது. படத்தின் புரோமோஷனுக்கு உதவும் வகையில் அது அமைந்தது.

இந்நிலையில் நயன்தாரா ஒரு குட்டி பாப்பாவுடன் கொஞ்சி மகிழும் வீடியோ வெளியாகியுள்ளது. நயன்தாராவே தனது டிவிட்டர் பக்கத்தில் இதனை வெளியிட்டுள்ளார்.

அதில், பார்த்தாலே கொஞ்சத் தோன்றும் லட்டு போன்ற குட்டிப்பாப்பா ஒன்றுடன் நயன் இருக்கிறார். முதலில் இருவரும் போட்டோவுக்கு போஸ் கொடுக்கின்றனர். பின்னர் இருவரும் ஒருவரை ஒருவர் கொஞ்சி விளையாடுகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!