கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்கடித்த நடிகை காத்ரீனா கைஃப் – பாருங்க ஷாக் ஆயிடுவீங்க..!!


தமிழில் கமல்ஹாசன் நடிப்பில் உருவான அபூர்வ சகோதரர்கள் படத்தில் கமல்ஹாசன் சாதாரன தோற்றத்தில் உள்ள ராஜாவாகவும் குள்ளமான தோற்றத்தில் உள்ள அப்புவாகவும் இருவேறு தோற்றங்களில் நடித்து அசத்தியிருப்பார். அதில் அவர் குள்ள கமலாக நடித்து 30 ஆண்டுகளாக ஆகிவிட்டாலும் இன்னமும் அந்த கதாபாத்திரத்தின் மீதான கவர்ச்சி குறையவில்லை.


தற்போது அதேப் போன்ற ஒரு குள்ளமனிதன் கதாபாத்திரத்தில் இந்தி நடிகர் ஷாருக் கான் நடித்துள்ள ஸீரோ படம் வரும் டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் விடுமுறையின் போது வெளியாக உள்ளது. 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் மிகப்பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்த படத்தில் அனுஷ்கா ஷர்மா, காத்ரினா கைஃப் இருவரும் ஷாருக் கானுக்கு ஜோடியாக நடித்துள்ளனர். ஆனந்த எல் ராய் இயக்கியிருக்கும் இப்படத்தை ஷா ருக் கானின் மனைவி கௌரி கான் தயாரித்துள்ளார். இசை சாய்ராட் புகழ் அஜய் -அதுல்


இந்தப் படத்தில் ஷாருக் கானுக்காக சல்மான் கான், கஜோல், தீபிகா படுகோனே, ராணி முகர்ஜி, மறைந்த ஸ்ரீதேவி, அலியா பட், கரிஷ்மா கபூர், ஜுஹி சாவ்லா, மாதவன் ஆகியோர் சிறப்புத் தோற்றங்களில் நடித்துள்ளனர். சமீப காலமாக தொடர்ந்து தோல்வி படங்களையே கொடுத்து வரும் ஷாருக் கான் இந்த படத்தை எப்படியாவது வெற்றிப் படமாக்க வேண்டும் என்பதில் முழுமூச்சாக இறங்கியுள்ளார்.


இந்த படத்தின் ஒரு பாடல் மட்டும் தற்போது வெளியாகியுள்ளது. இதில், காத்ரினா கைஃப் படு சூடான நடன அசைவுகளை வெளிப்படுத்தி நடித்துள்ளார். இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!