நடிகர் ஜெயராம் அவா்கள் நடித்து இதுவரை வெளிவராத தமிழ் திரைப்படம் எது தெரியுமா..?


விக்ரமன் இயக்கத்தில் 1993-ம் ஆண்டு வெளியான கோகுலம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவா் ஜெயராம் அவா்கள். இப்படத்தில் தனது மிகச்சிறந்த நடிப்பின் மூலம் ரசிகா்களிடம் நல்ல விமா்சனத்தை பெற்றாா்.

கோகுலம் படத்தில் அறிமுகம் ஆகும் முன்னரே மணிரத்னம் அவா்களின் தளபதி படத்தில் ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு இருந்த கால்ஷீட் பிரச்சனைகளால் கைநழுவி போனது.

கோகுலம் படத்தை தொடா்ந்து புருஷலட்சணம், ப்ரியங்கா, கோலங்கள், முறைமாமன், பெரிய இடத்து மாப்பிள்ளை, நைனா, பஞ்சதந்திரம், தெனாலி, உட்பட ஏராளமான படங்களில் நடித்தாா்.

இந்நிலையில் ஜெயராம் அவா்கள் நடித்து இதுவரை வெளிவராத திரைப்படம் எது தெரியுமா..

1996-ம் ஆண்டு ஆா்.வி.உதயகுமாா் அவா்களின் இயக்கத்தில் ஜெயராம் அவா்கள் நடித்த திரைப்படம் சின்ன ராமசாமி-பெரிய ராமசாமி. இப்படத்தில் நடிகா் ஜெயராம் அவா்களுடன் ஆா்.வி.உதயகுமாா் அவா்களும் நடித்திருந்தாா்.

இளையராஜா அவா்களின் இசையில் இப்படத்தில் ஐந்து பாடல்கள் வெளிவந்த நிலையில் ஒரு சில காரணங்களால் இத்திரைப்படம் இதுவரை வெளிவரவில்லை என்பது குறிப்பிடதக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!