தனுஷ் 50-வது படத்தின் அதிரடி அறிவிப்பை வெளியிட்ட படக்குழு

தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் தனுஷின் 50-வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது. மேலும், இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, அபர்ணா பாலமுரளி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் பரவி வந்தது.

இந்நிலையில், இப்படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, தனுஷின் 50-வது படத்தை அவரே இயக்கி நடிக்கிறார். அதுமட்டுமல்லாமல் இப்படத்தின் படப்பிடிப்பும் துவங்கியுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.


  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!