சாதனை பெண்ணாக மாறிய சாதுவான அம்மா..!! என்ன செய்தார் தெரியுமா..?


பாவமான அம்மா ரோல்னா, அப்போதைய இயக்குனர்களுக்கு நினைவுக்கு வரும் ஒரே பெண் இவர் தான்.. விசுவின் மனைவியாக எதார்த்தமான, கிராமத்து அம்மாவாக ஒரு காலத்தில் பேசப்பட்ட நடிகை தான் கமலா காமேஷ்..

மூத்த நடிகையான கமலா காமேஷ் 80, 90-களில் தென்னிந்திய மொழித் திரைப்படங்களில், அம்மா கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்தவர்.

கடந்த 14 ஆண்டுகளாக சினிமாவில் நடிக்காமல் இருக்கிறார். இப்போது கூட நல்ல வாய்ப்பு கிடைச்சா உடனே நடிக்கத் தயார் என்கிறார்,

தற்போது தன் மகளான உமா ரியாஸ்கான் உடன் வாழ்ந்து வருகிறார்..

ஏன் நடிப்பு பாதியில் நின்றது..?

இடுப்பில் அறுவை சிகிச்சை செய்ததால், நடிப்புக்கு பிரேக் விழுந்தது அதனால் தொடரமுடியவில்லை என்கிறார்..

சினிமா துறைக்கு எப்படி அறிமுகம்..?


இசையமைப்பாளர் காமேஷ் தான் இவரது கணவர். கணவரின் நண்பரான இயக்குனர் ஜெயபாரதி, தன் புதிய படத்துக்கு ஒல்லியா, உயரமா, குடும்பப் பாங்கான பெண்ணைத் தீவிரமா தேடி கொண்டு இருக்க

அப்போது தான் ஜெயபாரதி இவரை பார்த்துள்ளார்.. அதன் பயன் தான் இந்த அளவிற்கு பிரபலமாகியுள்ளார்.. ‘குடிசை’ படத்துல ஹீரோயினா நடித்துள்ளார்..

இந்த படத்திற்கு பிறகு நிறைய வாய்ப்புகள் வந்துள்ளது, ஆனாலும் ‘அலைகள் ஓய்வதில்லை’ படம்தான் இவருக்கு பெரிய பிரேக்..

ஆனால், வந்தது அம்மா ரோல்னு தெரிந்ததும். அம்மாவாக நடிக்க மாட்டேன்னு அடம்பிடித்துள்ளார்..

பாரதிராஜா படத்துல நடிக்கிறதே பெரிய விஷயம். வந்த சான்ஸ்சை மிஸ் பண்ணிடாதே’னு கணவர் சொல்ல, பிறகு சமாதானம் ஆகி நடித்துள்ளார்

குடிசை படம் பாதி ஷூட் முடித்த நிலையில், இவர் நடிப்பைப் பார்த்துவிட்டு ஆச்சர்யப்பட்டார் விசு.

உனக்குள்ள இவ்வளவு திறமையை வைத்துகொண்டு வீட்டுக்குள்ளேயே முடங்கியிருக்கியேனு சொல்லி, மேடை ட்ராமக்களில் நடித்து பழகு என்று கூறியுள்ளார்

அவ்வாறே சினிமா, மேடை நாடகம் என்று பிஸியா இருந்துள்ளார் கமலா. விசு இயக்கத்தில் வெளியான ‘குடும்பம் ஒரு கதம்பம்’ படத்தில் இவரை நடிக்க வைத்துள்ளார் விசு..


தொடர்ந்து ‘மணல் கயிறு’, ‘சம்சாரம் அது மின்சாரம்’ உள்ளிட்ட அவரின் ஆறு படத்திலும் கமிட் ஆகி அம்மாவாக வலம் வந்தார்

கஷ்டமான காலத்தில் தன் திறமையை பயன்படுத்தி மேலே வந்துள்ளார்..எப்போது தெரியுமா..?

திடீர்னு கணவர் இறந்து விட அடுத்து தனி பெண்ணாக குடும்பத்தை நடத்தவும், கைக்குழந்தையான மகளை வளர்க்கவும் நடிப்புதான் இவருக்குஒரே வழியாக இருந்துள்ளது..

நடித்தே ஆக வேண்டும் என்று இருக்க,சப்போர்ட் பண்ண கணவர் இல்லாததால் இனி இவர் நடிக்க மாட்டார் என வதந்தி கிளம்பி ஒரு வருஷமா படவாய்ப்பே வர வில்லை.

பின் மீண்டும் கொஞ்சம் கொஞ்சமாக சான்ஸ் கிடைக்க, அதை கொண்டு தன் மகளை வளர்த்துள்ளார்..

தற்போது,இவர் மகள் உமா ரியாஸ்கான்கூடதான் வாழ்ந்து வருகிறார்… மகளும்,மாப்பிள்ளையும் இவரை நன்றாக பார்த்து கொள்கிறார்கள்..

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி#