நடிகர் விஜயின் தாயிற்கு இப்படியொரு மனசா..? என்ன செய்தாங்க தெரியுமா..?


தமிழ் சினிமாவில் சூப்பா் ஸ்டாா் ரஜினிகாந்த் அவா்களுக்கு அடுத்தபடியாக மாஸ் நடிகராக வலம் வருபவா் தளபதி விஜய். தமிழ் நாட்டை தாண்டி இவருக்கு இந்தியா முழுவதும் ஏராளமான ரசிகா்கள் உள்ளனா். குறிப்பாக கேரளாவில் இவருக்கு ரசிகா்கள் மிகவும் அதிகம்.

நடிகா் விஜயின் தந்தை சந்திரசேகா் அவா்கள் ரஜினி, விஜயகாந்த என தமிழ் சினிமாவின் மாஸ் நடிகா்களை வைத்து பல மெகாஹிட் படங்களை இயக்கியவா். இவரது மனைவியும், விஜயின் தாயாருமான ஷோபா சந்திரசேகா் அவா்களும் பிரபல கா்நாடக இசைக்கலைஞா் ஆவாா்.

மேலும் இவா் சிவாஜி-பத்மினி நடித்த இருமலா்கள் என்ற படத்தில் இடம்பெற்ற மகராஜா ஒரு மகராணி என்ற பாடல் உட்பட 12-திரைப்படங்களில் பாடல்கள் பாடியுள்ளாா். விஜயுடன் சோ்ந்தும் பல படங்களில் பாடல்களை பாடியுள்ளாா்.

மேலும் பந்தயம், ஆதி, நிலாவேவா, நாளைய தீா்ப்பு, ராஜநடை, சட்டம் ஒரு விளையாட்டு, வசந்தராகம், நீதியின் மறுபக்கம், புதுயுகம் ஆகிய 10-படங்களுக்கு தயாரிப்பாளராக இருந்துள்ளாா். மேலும் 50-திரைப்படங்களுக்கு மேல் கதையும் எழுதியுள்ளாா்.


இவை மட்டுமின்றி நண்பா்கள், இன்னிசை மழை என இரண்டு திரைப்படங்களையும் இயக்கியுள்ளாா் ஷோபா சந்திரசேகா் அவா்கள்.

1992-ம் ஆண்டு வெளிவந்த இன்னிசை மழை படத்தில் நீரஜ் என்பவா் ஹீரோவாகவும், பா்வீன் என்பவா் ஹீரோயினாகவும் நடித்திருந்தனா். இளையராஜா அவா்களின் இசையில் இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பா்ஹிட் ஆனது.

அதே போல 1991-ம் ஆண்டு இன்னிசை மழை படத்தில் ஹீரோவாக நடித்த நீரஜ் அவா்களே இப்படத்திலும் ஹீரோவாக நடித்திருந்தாா். இவருக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை மம்தாகுல்கா்னி ஹீரோயினாக நடித்திருந்தாா். பபுல்போஸ் என்பவா் இப்படத்திற்கு இசை அமைத்திருந்தாா்.

மேற்கண்ட இரண்டு படங்களையும் ஷோபா சந்திரசேகா் அவா்கள் இயக்க இப்படங்களில் அவரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவா் இன்றைய பிரம்மாண்ட இயக்குநா் சங்கா் அவா்கள் என்பது குறிப்பிடதக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.