வலிமை படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் – படக்குழுவின் அதிரடி முடிவு

போனி கபூர் தயாரிப்பில் எச். வினோத் இயக்கத்தில் தல அஜித் நடித்துள்ள படம் வலிமை.

இப்படத்தில் அஜித்துடன் இணைந்து நடிகை ஹுமா குரேஷி மற்றும் கார்த்திகேயா, விஜய் டிவி புகழ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

திரையுலக ரசிகர்கள் பட்டாளமே எதிர்பார்த்த வலிமை படத்தின் First லுக் மோஷன் போஸ்டர், சில தினங்களுக்கு முன் வெளியாகி உலகளவில் டிரெண்ட் ஆனது.

வலிமை படத்தின் முக்கியமான சண்டை காட்சியை கடந்த ஏப்ரல் மாதம் ஐரோப்பாவில் படமாக்க திட்டமிட்டிருந்தனர்.

அந்த சமயத்தில் கொரோனா 2வது அலை வேகமாக பரவி வந்ததால், திட்டமிட்டபடி படப்பிடிப்பை அங்கு நடத்த முடியாமல் போனது.

இந்நிலையில், தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதால், இந்த மாத இறுதியில் வலிமை படக்குழு ஐரோப்பா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அங்கு 10 நாட்கள் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளார்களாம். இதையடுத்து வலிமை படத்தின் படப்பிடிப்பு முடிவுக்கு வரும் என கூறப்படுகிறது.

iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/A4wHVNsC92I” frameborder=”0″ allowfullscreen>

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!