இதுதான் ‘2.0’ படத்தின் கதை..!! ஓபனாக பேசிய நடிகர் அக்‌ஷய் குமார்..!


ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்‌ஷய், எமி ஜாக்சன் நடிப்பில் உருவான படம் 2.0. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். வரும் 29ஆம் தேதி படம் வெளியாகியுள்ளது. இதற்கான புரொமோஷன் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

2.0 படத்தின் தெலுங்கு பதிப்பின் புரொமோஷன் நிகழ்ச்சி ஐதராபாத்தில் நேற்று நடைபெற்றது. அதில் ஷங்கர், ரஜினி, அக்‌ஷய் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக மூவரும் ஐதராபாத் விமான நிலையத்தில் ஒன்றாக புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

அதனைப் பதிவிட்டு, 2.0வின் படைப்பவன், காப்பவன், அழிப்பவன் என்று நடிகர் அக்‌ஷய் குமார் குறிப்பிட்டுள்ளார். மும்பையில் நடைபெற்ற 2.0 புரொமோஷன் நிகழ்ச்சியில் ரஜினி கலந்து கொள்ளவில்லை. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் மும்பை நிகழ்ச்சியில் அக்‌ஷய் குமாருக்கு தனி முக்கியத்துவம் அளிக்கவே ரஜினி தவிர்க்கப் பட்டார் என்று பட நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


இந்த சூழலில் தனது கதாபாத்திரத்தின் முக்கியத்துவத்தை விளக்க, 2.0 படத்தின் கால்வாசி கதையை வெளிப்படையாக அக்‌ஷய் குமார் தெரிவித்துள்ளார்.

அதாவது, இந்தப் புவி மனிதர்களுக்கு மட்டுமல்ல. விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் தான். இந்தப் புவியில் வாழும் பிற உயிரினங்கள் மீதும் அக்கறை செலுத்தும் வகையில் காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன. விலங்குகள், தாவரங்கள் மனிதர்களுக்கு எதிராகக் குரல் எழுப்ப முடியாது.

இருப்பினும் அவற்றுக்கும் வாழ உரிமை உண்டு. இயற்கையை நாம் அழிக்கக் கூடாது உள்ளிட்ட கருத்துகள் 2.0 படம் மூலம் எடுத்துரைக்கப்படுகிறது. இந்தப் படத்தின் கதைக்கருவை, இதுவரை யாரும் எடுக்கவில்லை. அதுவே தன்னை மிகவும் கவர்ந்து ஆச்சரியப்பட வைத்துள்ளது என்று அக்‌ஷய் குமார் கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.