ஆத்தாடி.. நம்ம தாம் தூம் பட நடிகையா இது..? இப்படி ஆயிட்டாங்களே..!! வைரல் புகைப்படம்..!!


தாம் தூம் 2008 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இந்த படம் ஜெயம் ரவிக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. இந்த திரைப்படம் சண்டையும் காதலும் கலந்த படம். இந்த படத்தை மறைந்த டைரக்டர் ஜீவா எழுதி இயக்கினார். இதில் ஜெயம் ரவி, லட்சுமி ராய், கங்கனா ரனாத், ஜெயராம், ஸ்ரீநாத் ஆகியோர் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இந்த படத்திற்கு இசையமைத்தார்.

இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் பாலிவுட்டில் பிரபல நடிகையாக இருக்கும் கங்கனா ரணாவத். இவர் எப்பொழுதும் சர்ச்சைகளில் சிக்கி அனைவரது பார்வையையும் இவரது பக்கம் திருப்புபவர்.தற்போது வட இந்தியாவில் மிகச்சிறந்த நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் இவர் . பலவிருதுகளை பெற்றுள்ள இவர் தற்போது பல பட வாய்ப்புகள் பெற்று சிறப்பாக நடித்து வருகிறார்.

இவர் தற்போது ஒரு வரலாறு பேசும் படத்தில் நடித்து வருகிறார். இதற்காக தன் உடல் எடையை கடந்த இரண்டு மாதங்களாக கூட்டியுள்ளார்.


இவர் எப்பொழுதும் தனது உடலை கட்டுகோப்பாக வைத்திருப்பவர். ஆனால் இவர் உடல் எடையை அதிகபடுதியது அனைவருக்கும் ஆச்சர்யத்தை அளித்தது.

உடல் எடையை கூட்டிய பின்னர் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்காத கங்கனா தற்போது ஒரு கோவில் சென்று வழிபடும் போது வெளியில் தென்பட்டுள்ளார். அவரை பார்த்த ரசிகர்கள் அந்த இடத்திலேயே ஆரவாரம் செய்தனர்.

மேலும் சிலர் கங்கனா வித்யாசமாக குண்டாக இருப்பதை பார்த்து போட்டோ எடுத்து சமூக வலைதளங்களில் வைரல்.ஆக்கியுள்ளனர். தற்போது இந்த புகைப்படம் ட்ரெண்ட் ஆகி வருகிறது. இதற்கு முன்னர் தமிழில் தாம் தூம் என்ற படத்தில் ஜெயம் ரவியுடன் மிக கவர்ச்சியாக நடித்திருந்தார் கங்கனா ரானாவத். பின்னர் தமிழ் பட வாய்ப்புகள் வந்தும் அவர் அதனை ஏற்கவில்லை.

மேலும் இந்த படத்திற்காக வட இந்திய ரசிகர்கள் எப்பொழுது வெளியாகுமென ஆர்வம் காட்டி வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!