“உன்னாலே உன்னாலே” பட நடிகை இப்ப எப்படி இருக்காங்கனு தெரியுமா..? வைரல் புகைப்படம்..!!


தமிழில் இதுவரை பல காதல் திரைப்படங்கள் வெளிவதுள்ளது அதில் ஒரு சில படங்கள் மட்டும் மக்களின் மனதில் நீங்காது இடம் பிடித்து விடுகிறது. அந்த படங்கள் அந்த காலகட்டத்தில் சரியாக ஓடவில்லை என்றாலும் பின்பு வெகு நாட்கள் கழித்து காவியம் என்று புகழப்படும்.

அப்படி தமிழில் 2007இல் வெளியான மறைந்த இயங்குனர் ஜீவா எடுத்த படம் உன்னாலே உன்னாலே. இந்த படத்தில் நடிகர் வினைய்க்கு ஜோடியாக சதா நடித்திருப்பார். இந்த படம் முழுக்க முழுக்க இளசுகளுக்காக எடுக்க பட்ட படம் படம் முழுவது காதல் காட்சிகளே நிறைந்திருக்கும்.


இந்த படத்தில் மற்றொரு ஜோடியாக நடித்தவர் தான் நடிகை தனிஷா முகர்ஜி.பிரபல பாலிவுட் நடிகை கஜோலின் தங்கையான இவர் 1978 இல் மும்பையில் பிறந்தார்.இவர் சிறுவயதில் இருந்தே இவருக்கு நடிப்பின் மீது ஆர்வம் அதிகமாக இருந்ததால் சினிமா உலகில் நுழைந்தார். இவர் தமிழில் ஒரு சில படங்களே நடித்திருந்தாலும் வட இந்திய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார்.

பாலிவுட் முன்னணி நடிகர்களான அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன் ,சுனில் ஷெட்டி போன்ற முன்னணி ஹீரோக்களுடன் நடித்தவர். அப்படி இருந்தும் இவருக்கு பட வாய்ப்புகள் அதிகம் வராததால் முன்னணி ஹீரோயின்கள் மத்தியில் இவரால் ஜொலிக்கமுடியவில்லை.


ஒரு சில பட வாய்ப்புகள் வந்தாலும் சரியான கதையம்சம் இல்லாததால் நடிக்க மறுத்துவிட்டார் அதனால் பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்காததால் நிஷா சின்னத்திரைக்கு தாவினர். இவர் 2013 இல் ஹிந்தியில் ஒளிபரப்பான பிக் பாஸ் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.அந்த நிகழ்ச்சியில் 2ஆம் பரிசையும் வென்றார் நிஷா. அதே நிகழ்ச்சியில் பங்குபெற்ற 47 வயதாகும் அர்மீன் கோலியை காதலித்து வந்தாக பல தகவல்கள் வெளியாகின.

பின்னர் இருவரும் 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொள்ள போவதாக இருவரும் அறிவித்திருந்த நிலையில் இன்றுவரை திருமணம் செய்யாதது ஆச்சர்யமளிகிறது. தற்போது பட வாய்ப்புகள் எதுவும் இல்லாததால் தற்போது என்டெர்ட்டைன்மன்ட் ஈ என்ற ரியாலிட்டி ஷோவில் நடுவராக இருந்து வருகிறார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!