நடிகை கஸ்தூரியின் வைரலாகிய அசத்தல் புகைப்படங்கள்..! பாருங்க அசந்துருவீங்க..!!


இன்றைய சமூக வலைதளங்களில் அரசியல் முதல் மீடூ புகார்கள் வரை அனைத்து பிரச்சனைகளிலும் தன் கருத்தை வெளிப்படையாக கூறுபவர் நடிகை கஸ்தூரி. யார் இந்த கஸ்தூரி, இவரை பற்றிய ஒரு சில முக்கிய தகவல்களை இங்கு பார்ப்போம். நடிகை கஸ்தூரி 1976 ஆம் ஆண்டு ஜூன் 5 ஆம் தேதி சென்னையில் பிறந்தார். அப்பா IITயில் படித்த பொறியாளர், அம்மா ஒரு வழக்கறிஞர். கஸ்தூரி படிப்பில் படு சுட்டி. பத்தாம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பில் ரேங்க் ஹோல்டர். படிப்பில் மட்டுமல்ல விளையாட்டிலும் படு சுட்டி. இவர் பள்ளி பருவத்தில் மாநில அளவிலான ஹாக்கி சேம்பியன். ஹாக்கி மற்றும் இல்லை, இவர் தேசிய மாணவர் படயிலும் இருந்துள்ளார்.

திரைத்துறைக்கு வருவதற்கு முன்பு நடிகை கஸ்தூரி மாடலிங் துறையில் இருந்தார். 1992 ஆம் ஆண்டு மிஸ் மெட்ராஸ் போட்டியில் பங்கேற்று பட்டமும் வென்றார். நடிகை கஸ்தூரி 1991 ஆம் ஆண்டு இயக்குநர் கஸ்தூரிராஜா இயக்கத்தில் அறிமுக நடிகர் செல்வாவுக்கு ஜோடியாக ஆத்தா உன் கோவிலிலே என்ற தமிழ் படத்தின் மூலம் தன் திரையுலக வாழ்க்கையை தொடங்கினார்.


இதனைத்தொடர்ந்து நடிகர் பிரபு, சத்யராஜ் போன்ற அப்போதைய முன்னனி நடிகர்களுடன் இணைந்து நடித்து முன்னனி நடிகையானார். இவர் 1991 ஆம் ஆண்டு இயக்குநர் ஸ்ரீகுமார் இயக்கத்தில் உருவான சக்ரவர்த்தி படத்தின் மூலம் மலையாள திரையுலகில் அறிமுகமானார். 1992 ஆம் ஆண்டு கேங் வார் என்ற படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமானார். 1994 ஆம் ஆண்டு இயக்குநர் ஷிவமணி இயக்கத்தில் ஜானா என்ற படத்தின் மூலம் கன்னட திரையுலகில் அறிமுகமானார்.

நடிகை கஸ்தூரிக்கு பட வாய்ப்புகள் குறைந்து கொன்டே சென்றது, இவர் இறுதியாக 2003 ஆம் ஆண்டு பை பாஸ் என்ற ஹிந்தி குறும்படத்தில் நடித்தார் அத்துடன் இவர் திரையுலகில் காணாமல் போய் விட்டார். சுமார் 6 ஆண்டுகள் கழித்து இயக்குநர் எ.வெங்கடேஷ் இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவான மலை மலை படத்தில் குணசித்திர வேடத்தில் தோன்றியதன் மூலம் திரையுலகில் தன்னுடைய செகன்டு இன்னிங்க்சை தொடங்கினார் நடிகை கஸ்தூரி. 2010 ஆண்டு இயக்குநர் அமுதன் இயக்கத்தில் நடிகர் ஷிவா நடிப்பில் உருவான தமிழ்ப்படன் என்ற படத்தில் குத்து விலக்கா குத்து விலக்கா என்ற ஐட்டம் பாடலுக்கு அசத்தலான கிளாமர் டான்ஸ் ஆடி அசத்தியிருப்பார் நடிகை கஸ்தூரி.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!