வாவ்… இது நம்ம கீர்த்தி சுரேஷ் தானா..? வைரல் புகைப்படத்தால் ஷாக்..!!


மலையாளத்திலிருந்து தமிழுக்கு இறக்குமதியாகியுள்ள இளம் நடிகை கீர்த்தி சுரேஷ். 1980களில் மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்த மேனகா, தமிழிலும் நெற்றிக்கண் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். இவரது மகள் தான் இந்த கீர்த்தி சுரேஷ். கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில், 1992ம் ஆண்டு அக்டோபர் 17ம் தேதி பிறந்தார் கீர்த்தி சுரேஷ். டில்லியில் பேஷன் டிசைனிங் முடித்துவிட்டு அப்படியே சினிமாவுக்கு வந்துவிட்டார்.

ஆரம்பகாலத்தில் தனது தந்தையின் தயாரிப்பில் உருவான சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த கீர்த்தி சுரேஷ், 2013ம் ஆண்டு கீதாஞ்சலி எனும் மலையாள படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். தொடர்ந்து மலையாளத்தில் சில படங்களில் நடித்தவர் அப்படியே தமிழுக்கும் வந்துவிட்டார்.


கீர்த்தி சுரேஷ்க்கு தற்போது சண்டகோழி 2, சர்க்கார் என படங்கள் வரிசையாக நிற்கிறது. தற்போது தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி ஹீரோயின் இவர் தான்.முன்னணி ஹீரோக்களுடன் அவர் தற்போது அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகிவருகிறார். இன்று அவருக்கு பிறந்த நாள். பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் கூறினர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!