இந்த நடிகைகள் அரச குடும்பத்தை சேர்ந்தவர்களா..? யாருக்கும் தெரியாத ரகசியம் அம்பலம்..!!


அந்த கால நடிகைகளில் இருந்து, அனுஷ்கா ஷெட்டி, நயன்தாரா, தீபிகா படுகோனே என இந்த கால நடிகைகள் வரை பலரை பல திரைப்படங்களில் நாம் அரச குடும்ப பெண்களாக, மகாராணி, இளவரசியாக கண்டு ரசித்திருப்போம்.

ஆனால், நீங்கள் திரையில் கண்டு ரசித்து, அழகிலும், கவர்ச்சியிலும் மயங்கிய நடிகைகள் சிலர் நிஜமாகவே ராஜ வம்சத்தை சேர்ந்தவர்கள், இளவரசிகள் என்றால் உங்களால் நம்ப முடியுமா?

இப்போது எங்கே இந்தியாவில் அரசு ராஜ்ஜியம் நடக்கிறது. இப்போதுமா அவர்கள் இளவரசி என்று நீங்கள் கருதலாம். இப்போது அவர்களுக்கு கீழே ராஜ்ஜியம் இல்லாமல் இருக்கலாம்.


ஆனால், அவர்கள் உடலில் ஓடும் இரத்தம் இன்னும் அரச குடும்ப இரத்தம் தான். இதில் சிலர் இன்னும் அந்த ராஜா வாழ்க்கை தான் வாழ்ந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சோஹா அலி கான்!
முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும், 1952 முதல் 1971ம் ஆண்டு வரையிலும் பட்டோடி நவாபாக இருந்த மறைந்த மன்சூல் அலி கான் பட்டோடியின் மகள் தான் சோஹா அலி கான்.

இவரது தாத்தா இப்திகர் அலி கான் பட்டோடி பட்டோடி வம்சத்தின் எட்டாவது நபாப் ஆவார். இவரது பாட்டி சஜிதா சுல்தான் போபாலின் பேகம் ஆவார்.

2011ம் ஆண்டு இவரது தந்தையின் மறைவிற்கு பிறகு நடிகரும் இவரது சகோதரனுமான சயப் அலி கான் பட்டோடியின் நவாபாக முடிசூடினார்.


அதிதி ராவ் ஹைதரி
காற்று வெளியிடை திரைப்படத்தின் மூலம் தமிழக ரசிகர்களிடம் பெரும் ஈர்ப்பு பெற்றவர் அதிதி ராவ் ஹைதரி. இவர் அக்பர் ஹைதரியின் கொள்ளுப் பேத்தி ஆவார். முன்னாள் அசாம் மாநில கவர்னரான சலேஹ் அக்பர் ஹைதரியும் இவரது உறவினர் தான்.

தற்போது தெலுங்கானா மாநிலத்தின் பகுதியாக இருக்கும் வணபர்த்தியை ஆட்சி செய்த ராஜா ஜே ராமேஸ்வர ராவ் மற்றும் ஐதராபாத்தில் பெரும் கல்வியாளராக திகழ்ந்த சாந்தா ராமேவர ராவ் அதிதி ராவ் ஹைதரியின் தாத்தா – பாட்டி ஆவர்.

சோனல் சௌஹன்!
ராஜ்புத் குடுமபத்தை சேர்ந்தவர் சோனல் சௌஹன். இவரது தந்தை மணிப்பூரில் போலிஸ் இன்ஸ்பெக்டராக உத்திர பிரதேஷ மாநிலத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் பிறந்த வளர்ந்தது எல்லாம் டெல்லியில் தான். இவர் இவ்வளவு அழகாகவும், இராணி போன்ற தோற்றம் கொண்டிருப்பதன் காரணம், இவரது இரத்தத்திலேயே இருக்கிறது.


ரைமா – ரியா சென்!
இவர்களது பாட்டி இலா தேவி கூச் பேஹரின் இளவரசி. இலா தேவியின் சகோதரியான காயத்திரி தேவி ஜெய்பூர் மகாராணி. ரியா செனின் எள்ளு தாத்தா / ஓட்டன் (Great Great Grand Father) திரிபுரா மகாராஜாவின் திவானாக இருந்தவர் என்று அறியப்படுகிறது.

பாக்யா ஸ்ரீ!
சல்மான் கானுடன் மெய்னே பியார் கியா (Maine Pyaar Kiya) என்ற படத்தில் அறிமுகமான பாக்யா ஸ்ரீ மகாராஸ்டிராவை சேர்ந்த சங்க்லி (Sangli) எனும் அரச குடும்பத்தை சேர்ந்தவராம். இவர் விஜய சிங் ராவ் மாதா ராவ் பட்வதர்ன் என்பவரின் மகள். பாக்யா ஸ்ரீயின் தந்தை சங்க்லியின் அரசர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!