சர்கார் படத்தில் இப்படியொரு சர்ப்ரைஷ் இருக்கா..? தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க..!!


ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் சர்கார். அரசியல் படமாக உருவாகி இருப்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. விஜய் இதில் முதல் அமைச்சராக நடிப்பதாக செய்தி வெளியானது. ஆனால் அதை அவரே மறுத்தார்.

சமீபத்தில் முருகதாஸ் அளித்த ஒரு பேட்டியின் மூலம் விஜய்யின் வேடம் பற்றி தெரிய வந்திருக்கிறது. தமிழகத்தில் இருந்து அமெரிக்காவிற்கு சென்று கூகுளின் தலைமை பொறுப்புக்கு வந்த சுந்தர் பிச்சையின் வேடத்தில் தான் விஜய் நடிக்கிறார்.

தமிழகத்தை சுரண்டுவதற்காக வெளிநாட்டில் இருந்து வரும் விஜய், பின்னர் தமிழ்நாட்டை அரசியல்வாதிகளிடம் இருந்து காக்க எப்படி போராடுகிறார் என்பதே கதை என்று கூறி உள்ளார்.

இதற்கிடையே படத்தின் டீசர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக இருக்கிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!