நடிகை ஆண்ட்ரியா வெளியிட்ட வீடியோ ஆல்பம்..!! எப்படி இருக்கு தெரியுமா..?


நடிகை ஆண்ட்ரியா நடிகை, பாடகி என பன்முகம் தன்மை கொண்டவர். ‘தரமணி’ படத்தில் அவரது நடிப்பு எல்லோராலும் பாராட்டப்பட்டது. அவர் ஏராளமான பாடல்களை பாடியுள்ளார். அவர் பாடிய பாடல்கள் அனைத்தும் ஹிட்டாயின. ஆங்கிலத்தில் கவிதை எழுதுகிறவர். ஏராளமான வீடியோ பாடல்களை எழுதி, பாடி வெளியிட்டுள்ளார்.

தற்போது முதன் முறையாக ஒரு ஆல்பத்தை தானே இயக்கி வெளியிட்டுள்ளார் நடிகை ஆண்ட்ரியா. அந்த ஆல்பத்துக்கு ‘ஹானஸ்ட்லி’ என்ற டைட்டில் வைத்துள்ளார்.

இந்த வீடியோ ஆல்பம், காதலுடன் பிரேக்அப் ஆன ஒரு பெண் ஏக்கமும், சுதந்திர உணர்வும் கொண்டு பாடுவதாக அமைந்த பாடல். இந்த பாடலை ஆண்ட்ரியா எழுதி, பாடி நடித்திருக்கிறார். இதற்கு லியான் ஜேம்ஸ் இசை அமைத்துள்ளார். கெபா ஜெரிமியா என்ற இளைஞர் ஆண்ட்ரியாவுடன் ஆல்பத்தில் நடித்துள்ளார். யு டியூப்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த பாடல் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.