நம்ம அஜித்தை செம்மையா பாராட்டிய சிட்டுக்குருவி பாட்டி..!! என்ன சொன்னார் தெரியுமா..?


நடிகர் அஜித் என்றாலே, தமிழ் திரையுலகில் அவரது படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். அவரது ஒவ்வொரு படமும் வெளியாகும்போதல்லாம் அவரது ரசிகர்கள் அவரது படத்தைக் கொண்டாடுவது வழக்கம். தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வரும் அஜித் தற்போது மூன்றாவது முறையாக இயக்குனர் சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் 2019 பொங்கலுக்கு வெளி வரும் என்று தெரிய வந்துள்ளது.

விஸ்வாசம் படத்தில் அஜித்துடன் நயன்தாரா, தம்பி ராமையா,ரோபோ சங்கர், யோகி பாபு, சிட்டுக் குருவி பாட்டி ஆகியோர் நடித்து வருகின்றனர். இந்த சிட்டுக் குருவி பாட்டிதான் மெர்சல் படத்திலும் நடித்து உள்ளார். இவர் சில காட்சிகளில் மட்டும் மெர்சல் படத்தில் வந்து சென்றாலும், மக்கள் மனதில் நன்றாக பதிந்துள்ளார்.

இவர் அஜித்தை பாராட்டி ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார் இது தற்போது வைரலாகி வருகிறது. சில வரிகள் மட்டும் இடம் பெற்று இருக்கும் அவரது பேச்சில், ”அஜித் கடவுள் மாதிரி. எங்க கூடத் தான் உட்காருவாறு, எங்க கூடத்தான் சாப்பிடுவாரு, கடவுள்ன்னா அவர்தான் கடவுள்” என்று தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.