என்னப்பா.. சொல்றீங்க ஏப்ரல் இவருக்கு கல்யாணமா..? வெளியான வீடியோ..!!!


தமிழ் சினிமாவில் சில நடிகர்கள் அதிக காலமாக திருமணம் செய்து கொள்ளாமல் பிரம்மச்சாரியாக இருப்பவர்களில் நடிகர் ஆர்யாவும் ஒருவர். பல கதாநாயகிகளுடன் இவரை இணைத்து இதுவரை கிசுகிசுக்களும் வந்திருக்கின்றன. ஆனால் திருமணம் செய்வதாக எந்த ஒரு செய்திகளும் இதுவரை வெளியில் வராமல் இருக்கிறது.

அனைவரும் தங்களது உடலை நல்ல திடமாக வைத்துக்கொள்ள ஜிம் சென்று வருவார்கள். அதே போன்று நடிகர் ஆர்யா எப்போதும் தனது உடல் அமைப்பில் மிகவும் கவனம் செலுத்தி வருகின்றார்.

அதற்காக ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும்போது எடுத்த வீடியோக்களையும் அவ்வப்போது தனது சமூக வலைதள பக்கங்களில் தொடர்ந்து பகிர்ந்து வருவார்.


இந்நிலையில், ஆர்யா ஜிம் ஒன்றில் உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும்போது நண்பர் ஒருவருடன் பேசிய வீடியோ ஒன்று வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

அந்த வீடியோவில் நண்பர் ஆர்யாவிடம் காதலிக்கும் பெண்களையே திருமணம் செய்து கொள்ளலாமே என்று கேட்டதற்கு லவ் பண்ற பொண்ணுங்க எதுவும் செட்டாகலயே நான் என்ன வச்சிட்டா வஞ்சனை செய்றேன் என பதிலளித்தார்.

அதன் பின்னர் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் செய்திதாளில் பெண் வேண்டும் என விளம்பரம் கொடுக்கலாம் என்று இருக்கிறேன் என அவர் பதில் அளித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி#