அன்னை தெரசா விருதினை வென்றார் நடிகர் ராகவா லாரன்ஸ்..!! வாழ்த்தும் பிரபலங்கள்..!!


சிறந்த சமூக சேவகரான அன்னை தெரசாவின் 108வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, சென்னை காமராஜர் அரங்கத்தில் விருது வழங்கும் விழா நடந்தது.

அன்னை தெரசா டிரஸ்ட் சார்பில் நடந்த இந்த விழாவில் நிறுவனர் ஜி.கே.தாஸ், அன்னை தெரசா பேரவை மாநில தலைவர் டி.வி. பாலகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.

இதில் சிறந்த சமூக சேவைக்கான விருது திரைப்பட நடிகர் ராகவா லாரன்சுக்கு வழங்கப்பட்டது. தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் இவ்விருதை ராகவா லாரன்சுக்கு வழங்கினார்கள்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!