நான் பிரியங்கா சோப்ராவை காதலித்ததே இதற்காகதான்..!! நிக் ஜோனஸ் அதிரடி..!!


பிரியங்கா சோப்ராவுடன் காதல் மலர்ந்தது பற்றி நிக் ஜோனஸ் பேட்டி அளித்துள்ளார். அவர் கூறியதாவது,

‘‘ பிரியங்கா சோப்ரா ஒரு நண்பர் மூலமாக எனக்கு அறிமுகமானார். இருவரும் போன் நம்பரை வாங்கிக் கொண்டோம். அதன்பிறகு நேரில் சந்திக்கவில்லை. போனில் மட்டும் தகவல்கள் பரிமாறிக்கொண்டு இருந்தோம். 6 மாதத்துக்கு பிறகு ஒரு விழாவுக்கு இருவரும் சென்று இருந்தோம். அங்கு மகிழ்ச்சியாக நேரத்தை கழித்தோம்.

அதன்பிறகு ஒன்றாக வெளியே சுற்றினோம். அப்போது எங்களை இணைத்து பேசினார்கள். எங்கள் தொடர்பு பற்றி கேள்விகளும் எழுப்பினார்கள். நாங்கள் காதலிப்பதும் வெளியாகிவிட்டது. இந்தியாவில் பிரியங்கா சோப்ரா வீட்டில் நடந்த சடங்கில் நான் ஆன்மிக அனுபவத்தை உணர்ந்தேன். ’’ இவ்வாறு நிக் ஜோனாஸ் கூறினார்.

இவர்களது திருமணம் வருகிற டிசம்பர் மாதம் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!