அடுத்தடுத்து ஆப்பு வச்ச தமிழ் ராக்கர்ஸ்: ஆக்‌ஷன், சங்கத்தமிழன் என்று வரிசையாக லீக்!

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள சங்கத்தமிழன் படம் வழக்கம் போல் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் திருட்டுத்தனமாக வெளியாகியுள்ளது.

தமிழ்ராக்கர்ஸில் லீக்கான சங்கத்தமிழன்
ஒட்டுமொத்த சினிமாவையும் கதிகலங்க வைப்பது தமிழ் ராக்கர்ஸ். எந்தப் படம் வெளியானாலும் வஞ்சகம் இல்லாமல், திருட்டுத்தனமாக வெளியிடுவதில் கில்லாடி இணையதளமாக செயல்பட்டு வருகிறது. இதுவரை எத்தனை முயற்சி மேற்கொண்டாலும், திருட்டுத்தனமாக படம் வெளியிடும் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தை மட்டும் முடக்கவே முடியவில்லை. அப்படியே முடக்கினாலும், வெவ்வேறு டொமைன்களில் படத்தை அப்லோடு செய்து வருகிறது.

விஜய் சேதுபதியின் சங்கத்தமிழன்
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, ஆங்கிலம் என்று எந்த மொழியாக இருந்தாலும் படம் வெளியான கொஞ்ச நேரத்திலேயே இணையதளத்தில் லீக்காகிவிடும். தமிழ் ராக்கர்ஸ்க்கு சிறிய நடிகர், பெரிய நடிகர் என்ற பாகுபாடு எல்லாம் கிடையவே கிடையாது.

ரூ.90 ஆயிரம் கோடி பற்றாக்குறை!
இந்த நிலையில், தான் நேற்று விஷாலின் ஆக்‌ஷன், விஜய் சேதுபதியின் சங்கத்தமிழன் ஆகிய படங்கள் திரைக்கு வந்துள்ளன. ஆனால், என்ன சங்கத்தமிழன் மாலையில்தான் திரைக்கு வந்தது. வந்த வேகத்தில் தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் திருட்டுத்தனமாக சங்கத்தமிழன் படத்தை பதிவேற்றியுள்ளது. இது என்னவோ தமிழ் ராக்கர்ஸ் ரசிகர்களுக்கு குஷியாக இருந்தாலும், கடன் வாங்கி படம் எடுக்கும் தயாரிப்பாளர்களுக்குதான் நஷ்டத்தை ஏற்படுத்துகிறது. திருட்டுத்தனமாக படம் வெளியாவதால் இந்தியாவில் ரூ.90 ஆயிரம் கோடி வரையில் பற்றாக்குறை ஏற்படுவதாக தகவல் தெரிவிக்கின்றது.

தமிழ்ராக்கர்ஸில் லீக்கான ஆக்ஷன்
தமிழ் ராக்கர்ஸில் வெளியானால் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் பாதிக்கப்படும். ஏற்கனவே படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டு பின்னர் மாலையில்தான் திரைக்கு வந்துள்ளது. சங்கத்தமிழன் விலகியதால், விஷாலின் ஆக்‌ஷன் படம் முதல் நாளில் மட்டும் ரூ.3.5 கோடி வரையில் வசூல் குவித்துள்ளது. சென்னையில் மட்டும் இப்படம் ரூ.34 லட்சம் கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி வசூல் கொடுத்தாலும், ஆக்‌ஷன் படமும் நேற்று காலையிலேயே தமிழ் ராக்கர்ஸில் வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!