ஹீரோவாக நடிக்க தயாராகுகின்றார் யோகிபாபு..!! இயக்குனர் யார் தெரியுமா..?


தமிழ் சினிமாவில் பல காமெடியன்கள் ஹீரோவாக நடித்து சோலோவாக தங்கள் திறமையை காட்ட முயற்சித்துள்ளனர்.

யோகி பாபுவும் தற்போது ஒரு படத்தில் ஹீரோவாகவுள்ளார். டார்லிங் புகழ் இயக்குனர் சாம் ஆண்டன் இயக்கவுள்ள ஒரு புதிய படத்தில் யோகி பாபு ஹீரோ, அவருக்கு ஜோடியாக நடிக்க நடிகைகளுடன் பேச்சு வார்த்தை நடந்துவருகிறதாம்.

தனியார் செக்யூரிட்டி வேலை செய்யும் யோகி பாபு எப்படி அவர் இருக்கும் இடத்தில் நடக்கும் மிகப்பெரிய குற்றத்தில் இருந்து அனைவரையும் காப்பாற்றுகிறார் என்பது தான் கதையாம்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!