இளைய தளபதி பட்டம் என்னுடையது தான், ஆனால், பிக்பாஸ் சரவணன் ஓபன் டாக்

நாம் அனைவருக்கும் இளையதளபதி என்றால் முதலில் ஞாபகம் வருவது தளபதி விஜய், மேலும் இவருக்கு இந்த பட்டம் முதலில் அவர் நடிப்பில் வெளியான ரசிகன் திரைப்படலிருந்து வைக்கப்பட்டது.

ஆனால் கடந்த 2017 ஆம் ஆண்டு வியாஜ்ஜிய நடிப்பில் வெளியான மெர்சல் திரைப்படத்திலிருந்து இளையதளபதி – தளபதி விஜய்யாக மாற்றப்பட்டது.

இந்நிலையயில் முதலில் இளையதளபதி என்ற பட்டம் நடிகர் சரவணனுக்கு தான் வைக்கப்பட்டதாம், 1993ல் வெளியான நல்லதே நடக்கும் திரைப்படத்தில் இளையதளபதி சரவணன் என்று தான் டைட்டில் போட்டுள்ளனர்.

மேலும் தற்போது புரட்சி தளபதி என்று அழைக்கப்படுபவர் நடிகர் விஷால், ஆனால் முதலில் நடிகர் அருண் விஜய் நடிப்பில் 1996ல் வெளியான பிரியம் திரைப்படத்தில் புரட்சி தளபதி அருண்குமார் என்று டைட்டில் போட்டுள்ளனர்.

இதுக்குறித்து சரவணன், ஆம் அந்த டைட்டில் என்னுடையது தான், எஸ்.ஏ.சி சாரிடம் கேட்டேன், அவர் நீங்களும் அதை பயன்படுத்துங்கள் என்றார், விஜய்க்கு படம் வந்தது, எனக்கு வரவில்லை அவ்வளவு தான் என கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!