நடிகை சமந்தாவின் கணவருக்கு இப்படியொரு சோகம்..? எதனால் தெரியுமா?


நடிகை சமந்தா தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்துகொண்டபிறகு தொடர்ந்து ஹிட் படங்களாக கொடுத்து வருகிறார். அவர் நடிப்பில் பல படங்கள் விரைவில் திரைக்கு வரவுள்ளன.

ஆனால் அதற்கு நேர்மாறாக நாக சைதன்யாவுக்கு தொடர்ந்து தோல்வி படங்கள் மட்டுமே கிடைத்துள்ளது. Rarandoi Veduka Chudham மற்றும் Yuddham Sharanam போன்ற படங்கள் பாக்ஸ் ஆபிஸில் பெரிதாக வசூல் ஈட்டவில்லை.

இந்நிலையில் அவர் நடிப்பில் அடுத்து ஷைலஜா ரெட்டி அல்லுடு படம் வரும் 31ம் தேதி வெளியாவதாக இருந்தது. ஆனால் தற்போது கேரளாவில் வெள்ளம் பாதித்துள்ளதால் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் கேரளாவில் தான் நடந்து வந்தது, வெள்ளம் காரணமாக அது தடைபட்டுள்ளதால் படத்தை ரிலீஸ் செய்ய முடியாத நிலையில் படக்குழு உள்ளதாக நாக சைதன்யா ட்விட்டரில் கூறியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!