சினிமாவில் யார் யார் என்னை படுக்கைக்கு அழைத்தார்கள் தெரியுமா..? போட்டுத்தாக்கிய இலியானா..!!


வாய்ப்புக்காக படுக்கை – இந்த வார்த்தையை பற்றி பேசாத நடிகைகளே இருக்க முடியாது. படத்தில் நடிக்க வாய்ப்பு தர வேண்டும் என்றால் படுக்கையை பகிர வேண்டும் என்று கூறுகிறார் நடிகைகள். ஆனால், முன்னணியில் இருக்கும் நடிகைகள் யாரும் அப்படி சொல்வதில்லை.

ஒன்று அறிமுகமாகும் நடிகையாக இருக்கிறார்கள், அல்லது மார்கெட் காலியான நடிகையாக இருக்கிறார்கள்.இந்நிலையில், நடிகை இலியானா எனக்கு செக்ஸ் தொல்லை கொடுத்தவர்களை பட்டியல் போட்டு கூற நான் தயாராக இருக்கிறேன். பல நடிகர்கள், இயக்குனர்கள் இதை செய்கிறார்கள் என இலியானா கூறினார்.


ஆனால், மற்றொரு பயம் எனக்குள் இருக்கிறது. அவர்கள் யார் என்பது எனக்கு தெரியும். அதுபற்றி வெளியே சொன்னால் இங்கு எனக்கு வேலை செய்ய வாய்ப்பு கிடைக்காது. இதுநாள் வரை சம்பாதித்த பெயர் மற்றும் பணத்தை இழக்கும் அளவுக்கு என்னால் ரிஸ்க் எடுக்க முடியாது என இலியானா குறிப்பிட்டார்.

ஹாலிவுட்டில் செக்ஸ் டார்ச்சர் தருபவர்களை அம்பலப்படுத்த பல நடிகைகள் ஒன்றாக திரண்டு குரல் கொடுத்தார்கள். அதுபோல் இங்குள்ள நடிகைகள் ஒன்று திரண்டு குரல் கொடுக்க முன்வந்தால் செக்ஸ் டார்ச்சர் தருபவர்களின் பெயர்களை வெளியிட நான் தயார் என்றும் இலியானா கூறினார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!