அந்த நடிகரால்தான் என்னுடைய வாழ்க்கை நாசமா போனது..!! கதறி அழும் பிரபல நடிகை..!!


பாலிவுட் திரையுலகில் 2003 ஆம் ஆண்டு ‘ஹவாயின்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ‘மகி கில்’ இந்த படத்தை தொடர்ந்து பஞ்சாபி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் கதாநாயகியாக நடித்தார்.

இந்நிலையில் இவருக்கு நடிகர் சல்மான் கான் நடித்த ‘தபாங்’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. சிறு வேடமாக இருந்தாலும் பரவாயில்லை… சல்மான் கான் படம் என்பதால் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார்.

இந்த படத்தில் இவர் மிகவும் சிறிய ரோலில் நடித்ததால், திரைப்படம் வெற்றி பெற்றாலும் ரசிகர்கள் மத்தியில் இவருடைய கதாப்பாத்திரம் பேசும் அளவிற்கு இல்லை.

இந்த படத்தில் நடித்ததில் இருந்து, இயக்குனர்கள் பலர் இவரை தங்களுடைய படங்களில் சிறு கதாப்பாத்திரத்தில் மட்டுமே நடிக்க அணுகி வருகிறார்களாம். இதனால் பல படங்களில் கதாநாயகியாக நடித்த இவரின் திரையுல பயணம் சல்மான் கான் திரைப்படம் மூலம் திசை திரும்பி விட்டதாக நண்பர்களிடம் கண்ணீர் விட்டு புலம்பி வருகிறாராம் மகி கில்.

தற்போது இவர் சஞ்சய் தத் நடித்துள்ள ‘சஹீப் பிவி அவுர் கேங்ஸ்டார்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் மீண்டும் இவர் பழைய நிலையை அடைய உதவுமா..? என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!