ஆத்தாடி.. சிவாவை செம்மையா கலாய்த்த யுவன் சங்கர் ராஜா..!! எதற்காக தெரியுமா..?


இசையமைப்பாளர் யுவன் ‌ஷங்கர் ராஜா, நடிகர் மிர்ச்சி சிவா, ஹரிஷ் கல்யாண் ஆகியோரின் நெருங்கிய நண்பரான சாதிக் கடந்த 12 ஆண்டுகளாக டப்பிங் படங்கள் மற்றும் சீரியல் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

அவர் தனது ‘கிரீன் ஆப்பிள் புரொடக்சன்ஸ்’ சார்பில் ஒரு ஸ்டூடியோ கிளையை திறந்தார். இதில் ராதாரவி, இசை அமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா, தமிழ்படம் சிவா, ஹரிஷ் கல்யாண், ராஜு சுந்தரம் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இதில் சிவா இசை அமைக்க முயற்சிக்க, அதை யுவன் சங்கர் ராஜா கிண்டலடித்தார். யுவன்சங்கர் ராஜா பற்றி பேசிய சிவா, “யுவன் மீது எனக்குக் கொஞ்சம் கோபம் இருக்கிறது. அவரது முதல் தயாரிப்பில் என்னை ஹீரோவாக நடிக்க வைப்பதாகக் கூறியிருந்தார். ஆனால் ஹரிஷ் கல்யாண் அழகாக இருப்பதால் அவரை ஹீரோவாக்கி விட்டார்’ என்று கிண்டலாகக் கூறினார்.

இதற்கு யுவன், “நீங்கள் அருமையாக நடிப்பீர்கள். என் படத்திற்கு சுமாரான நடிகர்தான் தேவை என்பதால் தான் ஹரிஷைத் தேர்வு செய்தேன். அகில உலக சூப்பர் ஸ்டாரான உங்கள் அளவிற்கு அவரால் நடிக்க முடியாது” என்று பதிலளித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!