அஜித்தின் பட வசனத்தில் பதிலடி கொடுத்த பிரபல தயாரிப்பாளர்..!!!


தமிழ் சினிமாவில் தனக்கென்று பெரிய ரசிகர்கள் வட்டத்தை வைத்திருப்பவர் அஜித். இவருக்கு திரை நட்சத்திரங்கள் பலரும் ரசிகர்களாக தான் உள்ளனர்.

அந்த வகையில் த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனும் தீவிர அஜித் ரசிகர் தான்.

அவர் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியாகிய கிகிகி படம் படுதோல்வியை அடைந்தது, இதை தொடர்ந்து பலரும் இவரை கிண்டல் செய்ய தொடங்கினர்.


பல நாட்கள் அமைதியாக இருந்து ஆதிக் தற்போது ‘உலகமே உன்னை எதிர்த்தாலும் நீயா ஒத்துக்கிற வரை, உன்னை யாராலும் ஜெயிக்க முடியாது’ என்ற விவேகம் வசனத்தை டுவிட்டரில் பதிவு செய்துள்ளார், இதை யாருக்கு சொன்னார் என்று தெரியவில்லை.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!