ஆத்தாடி.. வைரல் நாயகி ஒரு விளம்பரத்தில் நடிக்க இத்தனை கோடி வாங்கினாரா..?


சமூக வலைதளங்களில் பலர் பிரபலம் அடைந்துள்ளனர். மலையாள சினிமாவில் மோகன்லால் நடித்த படத்தில் இடம்பெற்ற ஜிமிக்க கம்மல் என்ற பாடலும் அப்பாடலுக்கு கல்லூரியின் நடனம் ஆடிய ஷெர்லின் என்பவரும் மிகவும் பிரபலம் அடைந்தார்.

அதேபோல் Oru Adaar Love என்ற படம் மூலம் அறிமுக நடிகை பிரியா வாரியர் இளைஞர்களிடம் படு பிரபலம் அடைந்தார். இப்போது இவர் நிறைய விளம்பரங்களில் நடித்து வருகிறார்.

தற்போது வந்த தகவல் என்னவென்றால் அண்மையில் அவர் நடித்துள்ள விளம்பரத்திற்கு ரூ. 1 கோடி வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

அவருடைய சமூக வலைதளமான இன்ஸ்டகிராம் பக்கத்தில் இப்போது 6.2 மில்லியன் பாலோவர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!