விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் சாமி ஸ்கொயர் படத்தின் ஸ்பெஷல் என்ன தெரியுமா..?


நடிகர் விக்ரம், திரிஷா நடிப்பில் கடந்த 2003-ம் ஆண்டு வெளியான சாமி படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. போலீஸ் வேடத்தில் விக்ரம் கலக்கியிருந்தார். இப்படத்தை கமர்சியல் இயக்குனர் ஹரி இயக்கி இருந்தார்.

இந்நிலையில் சாமி படத்தின் இரண்டாம் பாகத்தை ‘சாமி ஸ்கொயர்’ என்ற பெயரில் தயாராகி வருகிறது. இதிலும் விக்ரம் போலீசாக நடிக்கிறார். திரிஷாவுக்கு பதில் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். முதல் கட்ட படப்பிடிப்பு நெல்லையில் தொடங்கி, பல்வேறு இடங்களில் நடந்து வந்தது.

தற்போது ஒரு குத்துபாடல் மட்டுமே மீதமாக உள்ளது. இப்பாடலை பழனியில் எடுக்க ஹரி திட்டமிட்டுள்ளார். பெப்பி சாங்காக உருவாக இருக்கும் இந்த பாடலுக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இந்த பாடல் காட்சியோடு முழு படப்பிடிப்பும் முடியவுள்ளது.

சமீபத்தில் வெளியான சாமி ஸ்கொயர் படத்தின் டிரைலர் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது. எனினும் விக்ரம்-ஹரி கூட்டணி மீது ரசிகர்கள் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். அதனால், இப்படம் மீது அதிகம் எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. விரைவில் படத்தின் பாடல்களை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!