உலக நாயகனுடன் நடிக்க நயன்தாரா விதித்த நிபந்தனைகளால் அதிர்ச்சி..!!


ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் 1996-ம் ஆண்டு வெளியான படம் இந்தியன். இதில் தந்தை-மகன் என இரு வேடங்களில் கமல் நடித்து அசத்தியிருந்தார்.

மேலும் மனிஷா கொய்ராலா, சுகன்யா, ஊர்மிளா மற்றும் கவுண்டமணி, செந்தில் உட்பட பலர் நடித்திருந்தனர். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

இதையடுத்து, இயக்குனர் ஷங்கர் தற்போது இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தை படமாக்க உள்ளார். இந்த படத்திலும் கமல்ஹாசன் ஹீரோவாக நடிக்கிறார். இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கவுள்ளார்.

இந்நிலையில் கமலுக்கு ஜோடியாக நடிக்க நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். நயன்தாரா கேட்ட சம்பளத்துக்கும் தயாரிப்பாளர் ஒப்புக் கொண்டார்.

இதையடுத்து படத்தில் நடிப்பதற்கான சில முக்கிய நிபந்தனைகளை நயன்தாரா விதித்துள்ளார்.

அதாவது, கால்ஷீட் கொடுத்த நாட்களில் மட்டுமே படப்பிடிப்பில் கலந்து கொள்வேன். அதற்கு மேல் தேவையிருந்தால், வேறு வலை எதுவும் இல்லாமல் இருந்தால் மட்டுமே படப்பிடிப்பில் கலந்து கொள்வேன்.

டூ பீஸ் மற்றும் நீச்சல் உடை காட்சிகளில் நடிக்கமாட்டேன். படத்தில் முத்தக் காட்சியிருந்தால் முன்கூட்டியே சொல்லிவிட வேண்டும் ஆகிய நிபந்தனைகளை விதித்துள்ளார்.

மேலும் இது குறித்து ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டுத் தர வேண்டுமெனவும் நயன்தாரா கூறியுள்ளதாக கூறப்படுகிறது.

இருப்பினும் இத்தனை நிபந்தனைகளுக்கும் ஒப்புதல் அளித்து ‘இந்தியன் 2’ – ல் நயன்தாராவை நடிக்க வைப்பதில் ஷங்கர் உறுதியுடன் இருப்பதாகவும் படத்தரப்பு கூறியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!