மக்கள் அதிகம் விரும்பும் நடிகர் யார்..? தமிழகத்தின் பிரபல வார இதழ் வெளியிட்ட தகவல்..!!


நடிகர்களின் மார்க்கெட் என்பது அவர் கொடுக்கும் ஹிட் படங்களை வைத்து தான் நிர்ணயிக்கப்படுகின்றது. இந்நிலையில் தமிழகத்தின் பிரபல வார இதழ் ஒன்று கருத்துக்கணிப்பு நடத்தியுள்ளது.

இதில் அடித்தட்டு மக்கள் வரை அதிக வரவேற்பு இருப்பது நடிகர் அஜித்திற்கு தான் என கூறியுள்ளனர்.

மேலும், இந்த கருத்துக்கணிப்பு வெறும் ரசிகர்கள் பலம் தாண்டி நடிகர்களின் அரசியல் வருகைக்காக தான் எடுத்தார்களாம்.

இதில் ரஜினி, கமலை விட அஜித்தின் பெயரை தான் பலரும் சொன்னதாக அந்த வார இதழில் குறிப்பிட்டுள்ளனர்.

அதுமட்டுமின்றி அதே இதழில் தான் இனி அஜித் படங்களில் நடிக்கமாட்டார், அரசியலுக்கு வந்துவிடுவார் என குறிப்பிட்டுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!